புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் தூக்கிட்டு தற்கொலை!

நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் வியாழக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News image

அர்ச்சகர் நாகராஜன்

Updated On :10 நவம்பர் 2022, 5:28 am

DIN


நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் வியாழக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் அக்ரஹார வீதியைச் சேர்ந்தவர் நாகராஜன்(55). ஆஞ்சனேயர் மற்றும் நரசிம்மர் கோயில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவராக பணியாற்றி வந்தார். 

கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னையால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் கோயிலுக்கு செல்ல அவருடைய மனைவி எழுப்பிய நிலையில், கழிவறைக்கு சென்றவர் அங்குள்ள ஜன்னலில் தான் அணிந்திருந்த துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.