தற்பொழுது பாலிசிதாரர்களுக்கு முகவர்கள் சிறப்பான சேவை புரிந்து வருகின்றனர். உதாரணத்திற்கு இறப்பு ஏற்படும் போது அலுவலகத்தை அணுகி இழப்பீட்டுத் தொகை பெற்று தருகின்றனர். ஆன்லைன் மூலம் பாலிசி பெற்ற பெரும்பாலோர் உரிய சேவை பெற முடியாது. எல்ஐசி முகவர் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்காக பணிபுரிந்தால் அந்நிறுவனங்கள் முகவர்களுக்கு அதிக ஊக்கத்தொகை கொடுக்கும். நாளடைவில் எல்ஐசி இன் வர்த்தகம் குறையும். எனவே, இந்த பீமா சுகம் என்ற கொள்கை எல்ஐசி-ஐ நசுக்கவே பயன்படும். எவ்வாறு பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது தனியார் நிறுவனங்களின் தாக்கத்தாலும் அரசின் ஒத்துழைப்பின்மையாலும் நலிவுற்றுள்ளது போல் எல்ஐசி-ம் எதிர்காலத்தின் நலிவுறும். அதனால் கோடிக்கணக்கான பாலிசிதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். எல்ஐசி மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு கிடைக்கும் நிதி பாதிக்கப்படும். எனவே அக்கொள்கை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் 30 தேதி ஹைதராபாத்தில் உள்ள ஐஆர்டிஏ அலுவலகம் முன்பு முகவர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. 543 எம்.பி.,- களுக்கும் இது சம்பந்தமாக கடிதம் கொடுத்துள்ளோம்.