பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
71 வயதான ஷாபாஸ், எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர் அங்கிருந்து, தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லண்டனுக்கு சென்று, அங்கிருந்து மறுநாள் பாகிஸ்தான் திரும்பினார்.
கடந்த இரண்டு நாள்களாக பிரதமர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செவ்வாயன்று அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் அமைச்சர் மரியம் அவுரங்கசீப் சுட்டுரை ஒன்றில் தெரிவித்தார்.
பிரதமர் விரைந்து குணமடைய மக்கள் அனைவரும் பிரார்த்திக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தாண்டின் தொடக்கத்தில் ஜனவரி, 2020- ஜூன் மாதத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

Ban NEET! Ban NEET! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் போராட்டம்!
உதயநிதி தலைமையில் நாளை (ஜூலை 28) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

பின்னாளில் அழாதீர்கள்! அகிலேஷ் யாதவை கூட்டணிக்கு அழைத்த ஓவைசி!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET



