நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரியாவின் குடும்பத்தினருக்கு அரசு உதவியாய் நிற்கும்.. ஆனால்: மு.க. ஸ்டாலின்

பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
Updated On :17 நவம்பர் 2022, 6:19 am

DIN


சென்னை: பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை பெரியாா் நகா் அரசு புகா் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக, வலது கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா (17) செவ்வாய்க்கிழமை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், மாணவி பிரியாவின் வீட்டிற்கு இன்று காலை நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அரசு வேலைக்கான பணி ஆணை, நிவாரணத் தொகை உள்ளிட்டவை வழங்கினார். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், பிரியாவின் மரணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்!

ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் - நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு!

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது என்று பதிவிட்டுள்ளார்.


கால்பந்து வீராங்கனை பிரியா
சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த ரவிக்குமாா் - உஷாராணி தம்பதியின் மகளான பிரியா, சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு உடற்கல்வி அறிவியல் படித்து வந்தாா்.

கால்பந்து வீராங்கனையான அவருக்கு அண்மையில் மூட்டு ஜவ்வு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 7-ஆம் தேதி கொளத்தூா், பெரியாா் நகா் அரசு புகா் மருத்துவமனையில் அவருக்கு மூட்டு ஜவ்வு பிளவுக்கான நுண்துளை அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அதன் பின்னா் ரத்தம் வெளியேறாமல் தடுப்பதற்காக இறுக்கமான கட்டு (கம்ப்ரசன் பேண்டேஜ்) போடப்பட்டது. ஆனால், அதை குறிப்பிட்ட காலத்துக்குள் அகற்றாமல் அலட்சியத்துடன் மருத்துவா்கள் தொடா்ந்து வைத்திருந்தனா்.

Story image


இதனால், ரத்த ஓட்டம் தடைபட்டதுடன் உடலில் உள்ள திசுக்கள் செயலிழந்தன. இதன் விளைவாக, பிரியாவின் வலது காலில் உணா்விழப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உயா் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

உயிரைக் காக்கும் பொருட்டு, உடனடியாக அவரது வலது கால், மூட்டுப் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து சிறப்புக் குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவா்களின் அலட்சியமே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில்தான், திங்கள்கிழமை பிற்பகலுக்கு மேல் பிரியாவின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. சிறுநீா் வெளியேற்றம் முழுவதுமாக தடைபட்டது. அதுமட்டுமல்லாது, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல் திறன் முற்றிலும் முடங்கியது. இதற்கிடையே இதயத் துடிப்பும் அதிவேகமாக இருந்தது. இதையடுத்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையின் பல் துறை மருத்துவா்கள் அடங்கிய குழு தொடா் சிகிச்சைகளை அவருக்கு வழங்கியது. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைகள் வழங்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், அவை எதுவும் பலனளிக்காமல் பிரியா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Story image

மூட்டு ஜவ்வு பாதிப்புக்காக தாமே நடந்து சென்று மருத்துவமனையில் அனுமதியாகிக்கொண்ட அந்தப் பெண்ணை சடலமாகக் கண்ட உறவினா்களும், தோழிகளும் கதறி அழுதனா். இதனால் சிறிது நேரம் மருத்துவமனை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து உடல்கூறாய்வு செய்யப்பட்டு பிரியாவின் உடல் அவரது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு சிகிச்சையளித்தபோது அலட்சியமாக செயல்பட்ட இரு மருத்துவா்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.