தேவநேயப் பாவாணர் பேத்தி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம்(57) முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை இரவு மறைவெய்தினார்


தம் வாழ்வையே தனித்தமிழ் இயக்கத்துக்காகத் ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றிய ' திராவிட மொழிநூல் ஞாயிறு' தேவநேயப் பாவாணரின் பேத்தி பரிபூரணம்(57) முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை இரவு மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருந்துகிறேன்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தம் வாழ்வையே தனித்தமிழ் இயக்கத்துக்காகத் ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றிய ' திராவிட மொழிநூல் ஞாயிறு' தேவநேயப் பாவாணர் அவர்களின் பேத்தி பரிபூரணம் அவர்கள் முதுகுத் தண்டுவடப் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை இரவு மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருந்துகிறேன்.
அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...