விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2022, 3:37 pm IST

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அதிமுகவின் கட்சி விதிகளை மீறியது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தெரிவித்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும், ஆவணங்களையும் நவ.30-ல் தாக்கல் செய்ய வலியுறுத்தி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பும், அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும் கோரிய நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.