
நவம்பர் 25, 26-ல் சென்னை - தாம்பரம் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 25, 26-ல் தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கீழகாணும் 4 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
* இரவு 11.40-க்கு புறப்படும் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் (40147) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* இரவு 11.59-க்கு புறப்படும் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் (40149) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* இரவு 11.20-க்கு புறப்படும் தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில் (40148) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
* இரவு 11.40-க்கு புறப்படும் தாம்பரம் - சென்னை கடற்கரை ரயில் (40150) நவம்பர் 25, 26-ல் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: கேக் தயாரிப்பில் களமிறங்கும் ஆவின் நிர்வாகம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.