திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திமுகவில் புதிய நிர்வாகிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணைச் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகளிரணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிரணிச் செயலாளராக ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு? முதல் செயல்திட்டம்!

சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

