நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஞாயிறன்று ஹைதராபாத் சென்ற கமல்ஹாசன், மூத்த இயக்குநர் கே.விஸ்வநாதன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு சென்னை திரும்பும்போது உடல் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருப்பதாக உணர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம்,
லேசான காய்ச்சல் காரணமாக நேற்று இரவு நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையில் அவர் தற்போது நலமாக உள்ளார் என்றும் இன்று அல்லது நாளை அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், உதயநிதி நடிக்கும் படம் என இரண்டு படங்களை கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...