மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், வேலை இழந்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு 10,000 வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைத்து விளைநிலங்களுக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகையை 100% முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்ற விவசாயிகள் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அறிவித்து போராட்டத்தை தொடர்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பூக்கி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அறிவியல் ஆயிரம்: மகிழ்ச்சியில் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு... ஏன் தெரியுமா?

ஈரான் எங்களிடம் ராணுவ உதவி கேட்கவில்லை! - ரஷிய அரசு அறிவிப்பு!

சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2026: மீனம்
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

