/

பழனி அருகே நூற்பாலையில் தீ விபத்து!

பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள நூற்பாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:57 am

DIN


திண்டுக்கல்: பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் உள்ள தனியார் வெங்கடேஸ்வரா நூற்பாலையில்  பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். 

பாதிப்பு, சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.