தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

டிச.6ல் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 நவம்பர் 2022, 8:32 am

DIN

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

டிசம்பா் 3-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.