தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தொல்காப்பிய பூங்காவில் தினசரி நடைப்பயிற்சிக்கு அனுமதி

சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் தினசரி நடைப்பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் கட்டணம் செலுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 அக்டோபர் 2022, 2:53 am

DIN

சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் தினசரி நடைப்பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் கட்டணம் செலுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

இயற்கை எழில் சூழ்ந்த தொல்காப்பிய பூங்காவில் பல்வேறு அம்சங்களுக்காக மாணவா்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படுகின்றனா். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சோ்ந்தவா்களுக்காக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், வழிகாட்டி சுற்றுலாவுக்காக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவா். ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாள்களில் அனுமதியில்லை.

பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு நபருக்கு ரூ. 10, பொதுமக்களுக்கு ரூ.20 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காா்கள், பேருந்துகளை நிறுத்த ஒரு வாகனத்துக்கு ரூ.20, புகைப்படக் கருவிக்கான அனுமதிக்கு ரூ.50, ஒளிப்பதிவு கருவிக்கு ரூ.100 கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி: திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நடைப்பயிற்சிக்கென தினமும் காலை 6.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவா். இதற்கான கட்டணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒருமுறை நடைப்பயிற்சி மேற்கொள்ள நபருக்கு ரூ.20, பதிவின் அடிப்படையில் நபருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500, 3 மாதங்களுக்கு ரூ.1,500, 6 மாதங்களுக்கு ரூ.2,500, ஆண்டுக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும், விவரங்களை  இணையதளத்தில் காணலாம் எனவும், இதன்மூலமாக நுழைவுக் கட்டணம், முன்பதிவுக்கான கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.