தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம்.
அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி நிதித்துறை துணை செயலளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, தற்போது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆா்) 4 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. 34 சதவீதமாக இருத்த அகவிலைப்படி, மேலும், 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதியைக் கணக்கிட்டு, வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 21 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
‘புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வால் ஆண்டுக்கு ரூ.54 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கு பொருந்துமா என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கண்காட்சி நடத்தி போலி தயாரிப்புகள் விற்பனை: ஒருவா் கைது

சபரிமலை வழக்கு: மனுதாரா்தான் நாட்டின் தலைமை அா்ச்சகரா? உச்சநீதிமன்றம் காட்டம்?

முதல்வராக விஜய் நாளை பதவியேற்பு?

ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் லட்சியத்தில் பெரிய முன்னேற்றம்: ராகுல் காந்தி
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


