முல்லை பெரியாறு தண்ணீர் திறக்கப்பட்டு 127வது ஆண்டு! பென்னி குயிக் சிலைக்கு மரியாதை!

முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்த 127 ஆவது ஆண்டு, பென்னி குயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பென்னி குயிக் சிலைக்கு மரியாதை
பென்னி குயிக் சிலைக்கு மரியாதை


கம்பம்: முல்லை பெரியாறு அணையிலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட பகுதிகளுக்கு தண்ணீர் கடந்த 1885 அக்டோபர் 10ஆம் தேதி திறக்கப்பட்டது, திங்கள்கிழமையோடு  127 ஆவது ஆண்டாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிகழ்வை கொண்டாடும் வகையில் லோயர் கேம்ப்பில் உள்ள மணிமண்டபத்தில்  அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் முழு உருவ வெண்கலச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாரதிய கிசான் சங்க மாவட்ட தலைவர் எம்.சதீஸ்பாபு, முல்லை சாரல் விவசாய சங்கம் ஜெயபால், கொடியரசன், 18ஆம் கால்வாய் சங்க தலைவர் ராமராஜ், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க அவை தலைவர் இ.சலேத்து,  பொதுச்செயலாளர் பொன்.காட்சிக்கண்ணன்  மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com