/

2026-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும். அதில் வெற்றிபெற வியூகங்களை அமைப்போம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

News image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:02 pm IST

விழுப்புரம்: தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டில் பாமக ஆட்சி அமையும். அதில் வெற்றிபெற வியூகங்களை அமைப்போம் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், கொல்லியங் குணத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள், முன்னோடிகள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் விழுப்புரம். கல்வி வளர்ச்சியில் கடைசி 2 இடங்களில் உள்ள மாவட்டங்களில் விழுப்புரம் ஒன்று. போதிய சுகாதார வசதிகள் இல்லை. ஆனால், டாஸ்மாக் விற்பனையில் தமிழகத்தில் விழுப்புரம் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலைத்தொடர்ந்தால், இந்த மாவட்டம் வளர்ச்சி பெற நீண்டகாலம் ஆகும். 

எனவே தமிழக முதல்வர் விழுப்புரம் மாவட்டத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்த மாவட்டம். திண்டிவனத்தில் மகளிர் கலலூரி அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. மயிலம் தொகுதியில் பேரூராட்சிகள் இல்லை. அங்கு கிராம ஊராட்சிகள்தான் உள்ளன. எனவே மயிலம் - விக்கிரவாண்டி இடைப்பட்ட பகுதியில் அரசுக் கல்லூரி அமைக்க வேண்டும்.

முலாயம்சிங் யாதவ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை எனது தலைமையில் காலநிலை - பருவநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.. தமிழக முதல்வர் காலநிலை - அவசரநிலை பிரகடனத்தை அறிவிக்கவேண்டும்.

மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு குடியரகத் தலைவருக்குப் பரிந்துரைத்துள்ளது. இது அபத்தமானது, ஆபத்தானது. இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் செயல். இதை ஏற்றுக்கொள்ளமாட்டோம். தீவிரமாக போராட்டத்தில் ஈடுபடுவோம். 

2026-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும். அதில் வெற்றி பெற வியூகங்களை அமைப்போம் என்றார் அன்புமணி ராமதாஸ். பேட்டியின்போது கட்சியின் கெளரவத் தலைவர் கோ.க.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.