தொல்காப்பிய பூங்காவில் நடைப்பயிற்சி செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் தினசரி நடைப்பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பிய பூங்காவில் நடைப்பயிற்சி செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி
தொல்காப்பிய பூங்காவில் நடைப்பயிற்சி செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் தினசரி நடைப்பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரே நேரத்தில் இதுவரை 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது 100 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொல்காப்பிய பூங்காவில் தினந்தோறும் கட்டணம் செலுத்தி நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம்தான் இந்த பூங்கா பொதுமக்களுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது. தற்போது ஒரே நேரத்தில் பூங்காவுக்குள் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இணையதளம் மூலம் முன்பதிவும் செய்து கொள்ளலாம். இதற்காக http://www.chennairiver.gov.in/ என்ற இணையதளமும் துவங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை கூறியிருந்ததாவது, 

இயற்கை எழில் சூழ்ந்த தொல்காப்பிய பூங்காவில் பல்வேறு அம்சங்களுக்காக மாணவா்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படுகின்றனா். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சோ்ந்தவா்களுக்காக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், வழிகாட்டி சுற்றுலாவுக்காக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவா். ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாள்களில் அனுமதியில்லை.

பள்ளி, கல்லூரி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு நபருக்கு ரூ. 10, பொதுமக்களுக்கு ரூ.20 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காா்கள், பேருந்துகளை நிறுத்த ஒரு வாகனத்துக்கு ரூ.20, புகைப்படக் கருவிக்கான அனுமதிக்கு ரூ.50, ஒளிப்பதிவு கருவிக்கு ரூ.100 கட்டணமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நடைப்பயிற்சி: திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நடைப்பயிற்சிக்கென தினமும் காலை 6.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவா். இதற்கான கட்டணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒருமுறை நடைப்பயிற்சி மேற்கொள்ள நபருக்கு ரூ.20, பதிவின் அடிப்படையில் நபருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.500, 3 மாதங்களுக்கு ரூ.1,500, 6 மாதங்களுக்கு ரூ.2,500, ஆண்டுக்கு ரூ.5 ஆயிரமும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும், விவரங்களை  இணையதளத்தில் காணலாம் எனவும், இதன்மூலமாக நுழைவுக் கட்டணம், முன்பதிவுக்கான கட்டணம் ஆகியவற்றைச் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com