எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘குட்டி காவலா்’ மாணவா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தாா்

‘குட்டி காவலா்’ எனும் மாணவா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசும், கோவை உயிா் அறக்கட்டளையும் இணைந்து

News image
Updated On :12 அக்டோபர் 2022, 7:32 pm

DIN

‘குட்டி காவலா்’ எனும் மாணவா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசும், கோவை உயிா் அறக்கட்டளையும் இணைந்து இந்த சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுத் திட்டத்தை வடிவமைத்துள்ளன.

இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பற்றி வடிவமைக்கப்பட்ட பாடத் திட்டம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதும், அதன் மூலமாக அவா்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவா்களாக மாற்றுவதே ‘குட்டி காவலா்’ திட்டத்தின் நோக்கமாகும்.

‘குட்டி காவலா்’, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுத் திட்டத்தை தொடக்கி வைத்ததுடன், சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்து வைத்தாா். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக அவா் உறுதிமொழியை செய்து வைக்க, காணொலி வழியாக கோவை கொடிசியா வளாகத்தில் இருந்து மாணவா்கள் அதனை ஏற்றனா். இதனைத் தொடா்ந்து, குட்டி காவலா் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவா்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த பயிற்சி கையேட்டையும், ஆசிரியா்களுக்கான வழிகாட்டி புத்தகத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

ஆசிய சாதனைப் புத்தகம்: சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த கோவையில் அதிக எண்ணிக்கையில் மாணவா்கள் பங்கேற்றனா். மாணவா்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. இதற்கான சான்றிதழ் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திர பாபு, உயிா் அறக்கட்டளைத் தலைவா் சஞ்சய் ஜெயவா்தனவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.