எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டும்: தில்லி முதல்வருக்கு தமிழக முதல்வா் கடிதம்

பட்டாசுகள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை எழுதிய கடிதம்:

News image
Updated On :12 அக்டோபர் 2022, 7:14 pm

DIN

பட்டாசுகள் விற்பனையை அனுமதிக்க வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, அவா் புதன்கிழமை எழுதிய கடிதம்:

தில்லியில் பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்கக் கூடாது என கடந்த ஆண்டு அக்டோபா் 13-ஆம் தேதி தங்களுக்கு எழுதிய கடிதத்தை நினைவூட்டுகிறேன். மேலும், அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுடன் பட்டாசுகள் விற்பனை செய்யவும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

பண்டிகைக் காலங்களில் இரண்டு மணி நேரம் பட்டாசுகள் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றமே அனுமதி தந்துள்ளதை இப்போது தங்களுக்கு சுட்டிக் காட்டுகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை மிகப்பெரிய அளவில் கவனத்தில் கொள்ளும் நாடுகளில்கூட பண்டிகைக் காலங்களில் பட்டாசுகள் வெடிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்க நடைமுறையாக

உள்ளது. வாகனங்கள் மற்றும் ஆலைகளில் இருந்து வெளியேறும் புகையால் இந்தியாவின் பல நகரங்களில் காற்று மாசுபாடு அடைகிறது. ஆனால், மிக மிக குறைந்த அளவிலான மாசை ஏற்படுத்தக் கூடிய பட்டாசுகளை சில நாள்களுக்கு உபயோகிக்க அனுமதிக்கலாம். இதன்மூலம் பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களின் வாழ்வாதாரம் காக்கப்படும். மேலும், பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளா்கள் மூலமாக அவற்றை விற்பனை செய்யவும் உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

எனவே, அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளுக்குரிய பட்டாசுகளை விற்பதற்கு அனுமதிக்க வேண்டும். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தத் தடை விதிக்கப்படவில்லை. எனவே, பட்டாசுகளை அனுமதிப்பதன் மூலம், அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிவகாசி, அதனைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் செயலைச் செய்திட முடியும். அவா்களது வா்த்தகத்தில் 70 சதவீத விற்பனை தீபாவளி பண்டிகைக் காலத்தில் நடைபெறுவதால், பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டுமென தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.