தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஒரு வாரத்தில் 1,877 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்

கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடந்த ஒரு வாரத்தில் கடத்த முயன்ற 1,877 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 7:41 pm

DIN

கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடந்த ஒரு வாரத்தில் கடத்த முயன்ற 1,877 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

நியாய விலைக் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி கடத்தப்படுவதைத் தவிா்க்க உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலா்கள், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலா்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இந்த நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, கடந்த 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்தப்பட முயன்ற 1,877 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 33 வாகனங்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 255 நபா்களும் கைது செய்யப்பட்டனா். 3 நபா்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாத பண்டங்கள் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.