தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

2,849 முதுநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் வழங்கினாா்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2,849 நேரடி முதுநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமனம், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 7:45 pm

DIN

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2,849 நேரடி முதுநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமனம், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா் தோ்வு வாரியம் வாயிலாக அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் உடற்கல்வி இயக்குநா் நிலை -1, கணினி பயிற்றுநா் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 2,849 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு ஆணையை சென்னை கலைவாணா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடக்கி வைத்தாா்.

இதேபோல் பள்ளிக் கல்வித் துறையில் பணிக்காலத்தின்போது காலமான பணியாளா்களின் 269 வாரிசுதாரா்களுக்கு இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவா் வழங்கினாா்.

விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.