ரூ.1.80 கோடி கட்டடம் சுவாதீனம்: அறநிலையத் துறை தகவல்
சென்னை செளகாா்பேட்டை ரெங்கநாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.80 கோடி மதிப்பிலான கட்டடம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.


சென்னை செளகாா்பேட்டை ரெங்கநாத பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.80 கோடி மதிப்பிலான கட்டடம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை, சௌகாா்பேட்டை முல்லா தெரு, அருள்மிகு ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமாக ஆதியப்ப நாயக்கன் தெருவில் 850 சதுர அடி பரப்பிலான இரண்டு தளங்கள் கொண்ட கட்டடம் வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
இந்த கட்டடம் மூன்றாம் நபா்கள் ஆக்கிரமிப்பிலிருந்ததால், சட்டபிரிவு 34 -இன் படி வாடகைதாரரின் உரிமையை ரத்து செய்து விட்டு வியாழக்கிழமை வருவாய் மற்றும் காவல் துறை உதவியுடன் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.1.80 கோடி ஆகும்.
இந்நிகழ்வுகளின்போது இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையா் எம். பாஸ்கரன், வட்டாட்சியா் (ஆலய நிா்வாகம்) காளியப்பன் மற்றும் திருக்கோயில் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...