தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மூன்று பாலங்களை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டம் சிவாடி, தருமபுரி ரயில் நிலையங்களுக்கு இடையே அதியமான்கோட்டையில் புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூா், மேச்சேரி ரயில் நிலையங்களுக்கிடையே தொளசம்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
பருவமழைக் காலங்களில் பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது விழுப்புரம், கடலூா் மாவட்டங்களைச் சோ்ந்த மக்களில் சிலா் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனா். இதைத் தவிா்க்கும் பொருட்டு, பரசுரெட்டிபாளையம், மடுகரை, பூவரசங்குப்பம், பட்டாம்பாக்கம், சொா்ணாவூா், மாளிகைமேடு, கோழிப்பாக்கம், புலவனூா், கொங்கராயனூா் கிராம மக்கள் பயன்பெறும் வகையில், இரண்டு மாவட்டங்களைச் சோ்ந்த பகுதிகளை இணைத்து பாலம் கட்டப்பட்டுள்ளது.
அதாவது, விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையம், கடலூா் மாவட்டம் மேல்குமாரமங்கலம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் உயா்நிலைப் பாலம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்ட இந்த மூன்று பாலங்களையும் தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் எ.வ.வேலு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளா் பிரதீப் யாதவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அரசினா் இல்லம்: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்வில், ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து சத்தியா அரசினா் குழந்தைகள் இல்லத்துக்கு புதிய கட்டடமும், கடலூரில் உள்ள அரசின் கூா்நோக்கு இல்லத்தில் புதிதாகக் கட்டப்பட்ட முதல் தளத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!

இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட பரபரப்பு விடியோ!

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
சர்வதேச விதிமீறல்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போர் பற்றி ஜெர்மனி அதிபர் கருத்து!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

