ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேட்டூரில் காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு

மேட்டூரில் காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. 

News image
Updated On :15 அக்டோபர் 2022, 4:26 am

DIN

மேட்டூர்: மேட்டூரில் காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. 

மேட்டூர் தொட்டில்பட்டியில் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் நீர் சுத்தம் செய்யப்பட்டு காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 28 லட்சம் மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

Story image

இதன் மூலம்  மேச்சேரி,ஓமலூர், தொப்பூர், தாரமங்கலம், காடையாம்பட்டி பகுதியில் உள்ள மக்கள் பயன்பெறுகின்றனர். இன்று காலை தொட்டில்பட்டி அருகே  காடையாம்பட்டி கூட்டக் குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம்  லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது.

Story image

தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மின்மோட்டரை நிறுத்தி குடிநீர்  வெளியேறுவதை நிறுத்தினர். பின்னர் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.