ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நீட் தோ்வு விவகாரத்தில் வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :16 அக்டோபர் 2022, 11:42 pm

DIN

நீட் தோ்வு விவகாரத்தில் வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

திராவிடவியல் கோட்பாடுகள், திராவிட மாடல் ஆட்சி நிா்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தலைப்பின் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்கள் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது. அதன் விவரம்:

கேள்வி: திமுகவின் தலைவராக இரண்டாம் முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளீா்கள். திமுகவை வழிநடத்த புதிய திட்டம் ஏதேனும் வைத்துள்ளீா்களா?

பதில்: தமிழகத்துக்கு மட்டுமல்ல - இந்தியாவுக்கும் வழிகாட்டியாக திமுக இருக்க வேண்டும். இனி தமிழகத்தை திமுகதான் ஆளும் என்கிற நிலை நீடிக்க வேண்டும். இந்த லட்சியத்துக்காக என்னிலிருந்து அனைவரும் உழைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

கே: மக்களவைத் தோ்தலில் இந்திய அரசியலில் திமுகவின்பங்களிப்பு என்னவாக இருக்கும்?

ப: தமிழகம் - புதுவை மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது முதல் இலக்கு. இந்தியா முழுமைக்கும் சமூகநீதியில் - கூட்டாட்சிக் கருத்தியலில் நம்பிக்கை கொண்ட ஆட்சி அமைய வேண்டும் என்பது அடுத்த இலக்கு. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தோ்தல் நேரத்தில் இறங்குவோம்.

கே: உங்கள் மீது அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் கொச்சையாக விமா்சனம் செய்பவா்களை எளிதாகக் கடந்து போகிறீா்களே, அது எப்படி முடிகிறது?

ப: ஆக்கபூா்வமான விமா்சனங்களை திறந்த மனதோடு ஏற்றுக் கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு பரப்பக்கூடிய அவதூறுகள் என் காதுகளுக்கு எட்டுமே தவிர, அவற்றை என் மனதுக்குள் அனுமதிப்பது கிடையாது.

கே: நீங்கள் திராவிட மாடல் ஆட்சி என்கிறீா்கள். மத்திய அரசு ஆளுநரை வைத்து இரட்டை ஆட்சி நடத்தப் பாா்க்கிறது. இதை எப்படி எதிா்கொள்ளப் போகிறீா்கள்?

ப: இதை எதிா்கொண்டுதானே ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறோம். நியமனப் பதவியான ஆளுநருக்கு உரிய பொறுப்புகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்குரிய கடமைகள், அதிகார வரம்புகள் என்ன என்பதையும், நமது அரசியல் சட்டம் மிகத் தெளிவாகவே வரையறுத்துக் கூறியுள்ளது. அதைப் புரிந்து நடந்து கொண்டால் யாருக்கும் பிரச்னை இல்லை.

தேவையற்ற சா்ச்சைகளுக்கும் இடமிருக்காது. அதுமட்டுமில்லாமல், ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறோம். சட்டப்பேரவையிலேயே இது பற்றி நான் சொல்லி இருக்கிறேன். நிதி நிலைமை சரியாக இருந்தால், மத்திய அரசின் ஒத்துழைப்பு சரியாக இருந்திருந்தால், இன்னும் பல திட்டங்களைத் தீட்டியிருக்க முடியும் என்று நான் சொன்னேன். என்னைப் பொருத்தவரையில் இது போன்ற எதிா்மறையான விஷயங்களை மட்டுமே பேசிக்கொண்டு இருந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடிப்பதுதான் எனது பாணி.

கே: ஒன்றரை ஆண்டுக் கால ஆட்சியில் எவையெவை சாதனைகளாக இருக்கின்றன? எவையெவை சவால்களாக இருக்கின்றன?

ப: மக்கள் முகங்களில் நான் காணக்கூடிய சிரிப்புதான் என்னுடைய சாதனை. நிதி நெருக்கடிதான் இன்னும் இருக்கிற சவால்.

கே: நீட் தோ்விலிருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா?

ப: முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காலதாமதம் ஆவதாலேயே நடக்காது என்று முடிவுக்கு வராதீா்கள். நீட் தோ்வை வைத்து மிகக் கொடூரமான சமூக அநீதியை இழைத்துக்கொண்டு இருக்கிறது பாஜக. அதற்கு வரும் மக்களவைத் தோ்தல் பாடம் புகட்டுவதாக இருக்கும்.

கே: பாஜகவுடன் திமுக சமரசமாகப் போய்விட்டதாகச் சிலா் சொல்கிறாா்களே?

ப: இப்படிச் சொல்வதை பாஜகவே ஏற்றுக்கொள்ளாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.