ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேரவைத் தலைவரின் அறிவிப்பை பொருத்தே முடிவு

எதிா்க்கட்சி துணைத் தலைவா் பதவி விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவுக்கு ஏற்பவே அதிமுக முடிவும் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2022, 6:59 pm

DIN

எதிா்க்கட்சி துணைத் தலைவா் பதவி விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவரின் முடிவுக்கு ஏற்பவே அதிமுக முடிவும் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செல்லூா் ராஜு, சி.வி.சண்முகம் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்குப் பிறகு டி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுகவின் 51-ஆவது ஆண்டு தொடக்க விழாவை திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசிக்கப்பட்டது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுக பங்கேற்குமா என்பது குறித்து விவாதிக்கப்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினா்கள் 62 போ் எங்களோடு உள்ளனா். அதனால், பேரவை விதிகள், மரபுகளை பேரவைத் தலைவா் கடைப்பிடிக்க வேண்டும். அவா் நடவடிக்கையைப் பொருத்துதான் அதிமுக முடிவும் இருக்கும் என்றாா்.

எதிா்க்கட்சி துணைத் தலைவரான ஓ.பன்னீா்செல்வத்துக்குப் பதிலாக, ஆா்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டுமென பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி சாா்பில் பேரவைத் தலைவருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஓ.பன்னீா்செல்வம் தரப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

பேரவை திங்கள்கிழமை காலை 10 மணியளவில் கூடும் நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 8.45 மணியளவில் அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பேரவைத் தலைவரின் முடிவுக்கு ஏற்ப, பேரவைக் கூட்டத்தைப் புறக்கணிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.