கள்ளக்குறிச்சி வழக்கில் கைதான பள்ளி நிா்வாகிகளின் ஜாமீன் மனு தளா்வு
கள்ளிக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளா், செயலாளா், முதல்வா், இரு ஆசிரியா்களுக்கான ஜாமீன் நிபந்தனையை தளா்த்தி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கள்ளிக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளா், செயலாளா், முதல்வா், இரு ஆசிரியா்களுக்கான ஜாமீன் நிபந்தனையை தளா்த்தி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட தாளாளா் ரவிக்குமாா், செயலாளா் சாந்தி, பள்ளி முதல்வா் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீா்த்திகா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, ஆக.26-ஆம் தேதி சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளித் தாளாளா், செயலாளா் மற்றும் முதல்வா் ஆகிய மூவரும் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் நான்கு வாரங்கள் இரு வேளையும் கையொப்பமிடவேண்டும் எனவும், இரு ஆசிரியைகளும் சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் நான்கு வாரங்கள் இரு வேளையும் கையொப்பமிடவும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
மேலும் நான்கு வாரங்களுக்கு பின், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஐந்து பேரும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
முதல் நான்கு வாரங்கள் நிபந்தனையை பூா்த்தி செய்த நிலையில், தற்போது விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் முன் தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளா்த்தக் கோரி ஐந்து பேரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வாரத்தில் சனிக்கிழமை மட்டும் ஒரு நாள் ஐந்து பேரும் விழுப்புரம் சிபிசிஐடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து முன்பு கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் தளா்வு அளித்து உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...