கொள்ளிடம் ஆற்று திறக்கப்பட்டுள்ள வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. புதன்கிழமை வரை 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் சென்ற நிலையில் வியாழக்கிழமை 1.30 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்ட நிலையிலும் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் கடலுக்கு செல்லும் தன்மை குறைந்துள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளமணல், கோரைதிட்டு, மேலவாடி உள்ளிட்ட 5 படுகை கிராமங்களில் வெள்ள நீர் மூன்றாவது நாளாக சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி தாழ்வான பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். கிராமத்தின் மேடான பகுதி மக்கள் அத்யாசே தேவைகளுக்கு படகுகள் மூலம் வெளியே சென்று வருகின்றனர்.