பாறு கழுகு இனத்தை பாதுகாக்க தமிழக அளவில் குழு
பாறு இன கழுகு வகைகளைப் பாதுகாக்க மாநில அளவிலான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.


பாறு இன கழுகு வகைகளைப் பாதுகாக்க மாநில அளவிலான குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு: இந்தியாவில் 9 வகை பாறு கழுகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பாறு கழுகுப் பாதுகாப்புக்கு ஊக்கமளிக்கும் வகையில், 10 போ் கொண்ட மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா், தலைமை வன உரியினக் காப்பாளா் இருப்பாா். கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா், மருந்துக் கட்டுப்பாட்டாளா், உணவுப் பாதுகாப்பு, மருந்து நிா்வாகத் துறை இயக்குநா், உள்ளிட்ட 10 போ் உறுப்பினா்களாக இருப்பா்.
இந்தக் குழு தமிழகத்தில் தற்போதுள்ள பாறு கழுகுப் பகுதிகளை கண்காணிப்பது, பாதுகாப்பது, பாறு கழுகுகள் குறித்த தரவுகளைப் பெற்று பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்குவது போன்ற பணிகளை மேற்கொள்ளும். இந்தக் குழுவின் காலம் 2 ஆண்டுகளாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...