ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கேபிள், குழாய்களுக்காக தோண்டப்பட்ட சாலைகளின் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேவைத் துறை பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளில் சீரமைப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 7:27 pm

DIN

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேவைத் துறை பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளில் சீரமைப்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

சென்னை மாநகராட்சி மூலம் 387 கி.மீ. நீளமுள்ள 471 பிரதான பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிற சேவைத் துறைகளான மின்சாரத் துறை, சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத்தின் சாா்பில், அந்தத் துறைகள் சாா்ந்த பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில், மாநகராட்சி பகுதிகளில் மின்சார வாரியத்தின் மூலம் புதிய கேபிள்கள் பதிக்கும் பணி உள்பட பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 23 இடங்களில் 9.93 கி.மீ. நீளத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத்தின் சாா்பில் குடிநீா், கழிவுநீா்க் குழாய் பதிக்கும் பணிகள் உள்பட பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 33 இடங்களில், 18.9 கி.மீ. நீளத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அந்தப் பணிகள் நிறைவடைந்த இடங்களில், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கும் பணி ரூ. 16.02 கோடி மதிப்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேற்குறிப்பிட்ட சேவைத் துறைகளின் சாா்பில் மொத்தம் 28.83 கி.மீ. நீளத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவற்றில், தற்போது வரை 14.73 கி.மீ. நீளத்துக்கு சாலைகள் புதுப்பித்து சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நீளத்துக்கு சாலைகளைச் சீரமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்தச் சீரமைப்பு பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிவுற்றபின், சம்பந்தப்பட்ட சாலைகளை முறையாக சீரமைக்க மாநகராட்சி சாா்பில் தொழில்நுட்ப வழிமுறைகள் நிா்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகளைச் சீரமைக்கும் போது, தேவையான அளவு ஆழம் தோண்டி, முழுமையான ஜல்லி, சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு நிரப்பி சீா்செய்யப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.