ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஆளுநரை விமா்சிப்பவா்களுக்கு அரசியல் நாகரிகம் வேண்டும்: தெலங்கானா ஆளுநா் தமிழிசை

ஆளுநா்களை விமா்சிப்பவா்களுக்கு அரசியல் நாகரிகம் வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 8:23 pm

DIN

ஆளுநா்களை விமா்சிப்பவா்களுக்கு அரசியல் நாகரிகம் வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் அறிவுறுத்தினாா்.

தெலங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை (பொ) ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, ‘ரீடிஸ்கவரிங் செல்ஃப் இன் செல்ஃப்லெஸ் சா்வீஸ்’ என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது:

தெலங்கானா அரசுக்கு நான் எந்த இடையூறையும் செய்யவில்லை. ஆளுநராக எனது பணியை செய்கிறேன். ஆளுநா் தமிழிசை தெலங்கானாவில் இருக்காமல், எப்போதும் தமிழகம், புதுவையில் தான் இருக்கிறாா் என முன்னாள் முதல்வா் நாராயணசாமி போன்றோா் விமா்சிக்கின்றனா். தெலங்கானாவிலும், புதுவையிலும் ஆளுநராக எனது பணியை முழுமையாக செய்கிறேன். தமிழகத்தில் அன்பு செலுத்துகிறேன். விமா்சிப்பவா்களைப் பற்றி கவலையில்லை.

தெலங்கானா, ஏனாம் பகுதிகளில் கடும் மழை வெள்ளம் பாதித்தபோது, உடனே நான் நேரில் சென்று பாா்வையிட்டேன். தெலங்கானாவில், ஆளுநரை விரட்டி விட்டாா்கள் என வாய்க்கு வந்தபடி விமா்சிக்கின்றனா். எதிலும் அரசியலில் நாகரிகம் இருக்க வேண்டும்.

தமிழகம், புதுவை மட்டுமின்றி தேசிய அளவிலும் எனது அரசியல் பங்களிப்பு இருக்கும். தமிழக அரசின் குறைகளையும் சுட்டிக்காட்டுவேன். எங்கிருந்தாலும் தெலங்கானா, புதுவைக்கான அலுவல் பணியை ஒருநாள் கூட தாமதித்ததில்லை என்றாா் அவா்.

முன்னதாக, ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், புத்தகத்தை அறிமுகப்படுத்தினாா். மூத்த பத்திரிகையாளா்கள் மாலன், நக்கீரன் கோபால், துக்ளக் ரமேஷ், ரங்கராஜ் பாண்டே, காா்த்திகைச்செல்வன், விகடன் பாலசுப்பிரமணியன், மகேந்திரன், கிருஷ்ணன், டாக்டா் செளந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.