மருத்துவ அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ. 6 லட்சம், 11 பவுன் நாணயங்கள் பறிமுதல்
சென்னை பெரம்பூரில் உள்ள மண்டல நிா்வாக மருத்துவ அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ. 6 லட்சம் ரொக்கம், 11 பவுன் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


சென்னை பெரம்பூரில் உள்ள மண்டல நிா்வாக மருத்துவ அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ. 6 லட்சம் ரொக்கம், 11 பவுன் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தீபாவளி பண்டிகையையொட்டி, பெரம்பூா் நெடுஞ்சாலை ஜமாலியாவில் உள்ள மண்டல மருத்துவ அலுவலகத்தில் சில அதிகாரிகள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருள்கள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, அந்த அலுவலகத்தில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தியது. அப்போது, கணக்கில் வராத ரூ. 6 லட்சம் ரொக்கம், 11 பவுன் எடையுள்ள 29 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினா், விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...