காவலர் நினைவு நாளையொட்டி சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து டிஜிபி சைலேந்திர பாபு மரியாதை செலுத்தினார்.
1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாளன்று லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். அன்று முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி "காவலர் வீரவணக்க நாள்" நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அன்றைய தினம் நாடு முழுவதும் முழுவதும் பாதுகாப்புப்பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1.5 லட்சம் கன அடியாக நீடிப்பு!
அதன்படி, சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவு தூணுக்கு, டிஜிபி சைலேந்திர பாபு மலர்வளையம் வைத்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.