மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி: டிஜிபி எச்சரிக்கை

மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள விடியோ பதிவில் தெரிவித்திருப்பதாவது:

மின் வாரியத்தில் இருந்து மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தியை அனுப்பவதாக மோசடி நபர்கள் குறுஞ்செய்தி அனுப்புவார்கள். பொதுமக்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவ்வாறு ஏதேனும் குறுஞ்செய்தி அனுப்பினால் 100 அல்லது 112 எண்ணை அழைத்து தொடர்பு கொள்ள வேண்டும்.  நீங்கள் பணத்தை இழக்கும் பட்சத்தில், இந்தியாவில் இருந்தால் மீட்க வழி உண்டு. வெளிநாட்டிற்கு பணம் சென்றுவிட்டால் மீட்பது கடினம்.

மேலும், மோசடி நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com