மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து இறந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் சனிக்கிழமை இரவு விழுந்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் முத்துகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வரின் நிவாண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் விழுந்து பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. எனவே, இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடராத வண்ணம் பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே செய்தியாளர் முத்துக்கிருஷ்ணன் பலிக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்.
முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


