துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் 40 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக தமிழக முன்னாள் ஆளுநரும், பஞ்சாபின் தற்போதைய ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் குற்றம் சாட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிக்க- சூரிய கிரகணம்: ஒடிசாவில் அக்.25ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
துணைவேந்தர் பதவிகள் விற்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துணைவேந்தர் பதவிகளை நிரப்பும் ஆளுநரே குற்றச்சாட்டை முன்வைப்பது தன் மீதா அல்லது வேற யார் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்பதை உரிய ஆதாரத்துடன் பன்வாரிலால் புரோஹித் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


