கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் இன்று நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
கொடநாடு பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு 11 போ் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்து, பங்களாவில் இருந்த பல்வேறு பொருள்களை கொள்ளையடித்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிக்க | கோவை கார் வெடிவிபத்து: என்ஐஏ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை
இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இவ்வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சயான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஐ.ஜி. சுதாகா் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு சசிகலா, முன்னாள் எம்எல்ஏ வி.சிஆறுக்குட்டி உள்பட 316க்கும் மேற்பட்டவா்களிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே கொடநாடு எஸ்டேட் வழக்கை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றி தமிழக டிஜிபி டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையிடம் விசாரணை ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இன்று கொடநாடு எஸ்டேட்டுக்கு நேரில் வந்த சிபிசிஐடி டிஜிபி விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட முடியாது: ரியான் பராக்

ஈரான் மீண்டும் கத்தாரை தாக்கினால், உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும்! - டிரம்ப் எச்சரிக்கை!

”வார்த்தைக்கு கண்டனம்! வாழ்க்கைக்கு?” தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

மார்கெரிட்டா தொகுதியில் பிரதீக் போட்டியிடாதது ஏன்? காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி காரணமா?
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

