இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தேவர் தங்கக்கவசம் எந்த தரப்புக்கு? இன்று 3 மணிக்குத் தீர்ப்பு

தேவர் தங்கக் கவசத்தை எந்த தரப்பிடம் ஒப்படைப்பது என்பது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பளிக்கவிருக்கிறது.

News image
கோப்புப்படம்
Updated On :26 அக்டோபர் 2022, 12:22 pm

DIN


தேவர் தங்கக் கவசத்தை எந்த தரப்பிடம் ஒப்படைப்பது என்பது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பளிக்கவிருக்கிறது.

ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர், தேவர் தங்கக்கவசத்தைப் பெற உரிமை இல்லை என்று கோரி திண்டுக்கல் சீனிவாசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள நினைவாலயத்தில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு, குருபூஜையன்று அதிமுக சாா்பில் தங்கக் கவசம் அணிவிப்பது வழக்கம். வங்கியில் உள்ள தங்கக் கவசத்தைப் பெறுவதில் முன்னாள் முதல்வா்கள் எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீா்செல்வம் தரப்பினரிடையே போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில், பிரச்னைக்குத் தீர்வு காண எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடக்கும் என்பதை நீதிமன்றம் இன்று தீர்மானிக்கவிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.