
கூடலூர்: வயநாடு மாவட்டத்தில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலி இன்று அதிகாலை கூண்டில் சிக்கியது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சீரால் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக புலி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளர்ப்புப் பிராணிகளை தூக்கிச் சென்றும், பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வனத்துறையினரை கண்டித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதனால் கேரளா வனத்துறை ஊருக்குள் வரும் அந்த புலியை பிடிக்க முடிவு செய்தது.
புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறை கூண்டு வைத்து கண்காணித்து வந்தது. தொடர்ந்து ஏமாற்றி வந்த புலி 33 நாள்களுக்குப் பிறகு கூண்டில் சிக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.