டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா?

ஜிம்பாப்வே அணிக்கு எதிராகத் தோற்ற பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா?

ஜிம்பாப்வே அணிக்கு எதிராகத் தோற்ற பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

பெர்த் நகரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். முகமது வாசிம் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இலக்கை விரட்டியபோது தடுமாறிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசிப் பந்தில் வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்டபோது 1 ரன் மட்டும் எடுத்து ரன் அவுட் ஆனார் ஷாஹீன் அப்ரிடி. சிகந்தர் ராஸா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

இந்தத் தோல்வியினால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது மேலும் கடினமாகியுள்ளது. கீழ்க்கண்ட முறையில் இதர ஆட்டங்களின் முடிவுகள் அமைந்தால் பாகிஸ்தானால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும்.

* மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்போது பாகிஸ்தான் வசம் 6 புள்ளிகள் இருக்கும். 
* இந்தியா எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். இதனால் இந்தியாவிடம் 10 புள்ளிகள் இருக்கும். 
* மீதமுள்ள 3 ஆட்டங்களில் இரண்டிலாவது தென்னாப்பிரிக்கா தோற்க வேண்டும். தற்போது 3 புள்ளிகளைக் கொண்டிருக்கும் தெ.ஆ. அணி அப்போது 5 புள்ளிகளை மட்டுமே கொண்டிருக்கும்.
* தற்போது 3 புள்ளிகளைக் கொண்டிருக்கும் ஜிம்பாப்வே மீதமுள்ள 3 ஆட்டங்களில் இரண்டிலாவது தோற்க வேண்டும். அப்போது ஜிம்பாப்வே அணியிடமும் 5 புள்ளிகள் மட்டுமே இருக்கும். 

இதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும்.  

ஆனால் அடுத்ததாக ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தையும் நெதர்லாந்தையும் வீழ்த்தி இந்தியா, பாகிஸ்தானிடம் தென்னாப்பிரிக்கா தோற்றால் ஜிம்பாப்வே அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com