நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையின்பேரில் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%-லிருந்து 19%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மழை காரணமாக 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடபட்டு இருந்தது.
22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை தொடா்பாக, மத்திய அரசு அதிகாரிகள் குழுவினா் தமிழகத்தில் அன்மையில் நேரில் ஆய்வு செய்தனர்.
விவசாயிகளின் கவலையைப் போக்கும் வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உணவுத் துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் சாா்பில் அண்மையில் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
மேலும், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும், மத்திய உணவுத் துறைச் செயலாளரைச் சந்தித்து 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கும்படி கோரியிருந்தார்.
இதையும் படிக்க: அதென்ன புனர்ப்பு தோஷம்: எந்த வகையில், யாருக்கு தீங்கு செய்யும்?
இந்நிலையில், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சி சிறப்பாக இருக்கும்! செங்கோட்டையன் பேட்டி | TVK | Sengottayan

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டி

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


