அதென்ன புனர்ப்பு தோஷம்: எந்த வகையில், யாருக்கு தீங்கு செய்யும்?

ராகு-கேது தோஷம், செவ்வாய் தோஷம் என பலவாறு கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன புனர்பு தோஷம்? இந்த தோஷம் அப்படி என்னதான் செய்யும் இதுபற்றி விரிவாக பார்ப்போம். 
அதென்ன புனர்ப்பு தோஷம்: எந்த வகையில், யாருக்கு தீங்கு செய்யும்?

ராகு-கேது தோஷம், செவ்வாய் தோஷம் என பலவாறு கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன புனர்பு தோஷம்? இந்த தோஷம் அப்படி என்னதான் செய்யும் இதுபற்றி விரிவாக பார்ப்போம். 

சந்திரனும், சனியும் ஒரே ராசியில் இருந்தால் இது ஒரு வலுவான புனர்பு தோஷம் என்று சொல்லப்படுகிறது. 

சந்திரன், சனி சம சப்தமாக அதாவது ஒருவரை ஒருவர் 7ஆம் பார்வையால் பார்த்துக்கொள்வது, இது ஒரு வலுவான புனர்பு தோஷம் ஆகும். சந்திரன், சனியின் நட்சத்திரங்களான,  பூசம், அனுஷம், உத்திரட்டாதி  இவற்றில் நிற்பது. சனி, சந்திரனின் நட்சத்திரங்களான, ரோகிணி, அஸ்தம், திருவோணம் இவற்றில் நிற்பது.

சனியின் பார்வையில் (3,7,10)இல்  சந்திரன் இருப்பது.

சந்திரனின் பார்வையில் (7) இல் சனி இருப்பது. ( சம சப்தம பார்வை)

சனியின் வீட்டில் சந்திரனும், சந்திரனின் வீட்டில் சனியும் பரிவர்த்தனையாக இருப்பது.

சந்திரனுடன், சனி பாகை முறையில் (3 பாகைக்குள் ) இணைவது.

சனி, சந்திரன் இந்த இரு கிரகங்களும் நிற்கும் நட்சத்திர அதிபதி ஒருவரே ஆகி ஆட்சி, உச்சம் பெற்று இருப்பது ஆகும். 

புனர்ப்பு தோஷம், எந்த வகையில், யாருக்கு தீங்கு செய்யும்? 

இது ஆண், பெண் இருவரின் ஜாதகத்திலும் ஏற்படும் அமைப்பாகும். இது திருமணத் தடையை ஏற்படுத்தும் தோஷம் ஆகும். 

இந்த தோஷம் உள்ளவர்களைப் பார்த்த வரன்களுக்குத்  திருமணத்தை ஏற்படுத்தும், ஆனால் ஜாதகருக்கு திருமணம் கைகூடாது. 

இது திருமண நாளன்று தாலி ஏறும் போது கூட தடையைத் தரும். இந்த தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் ஒருமுறைக்கு, இரண்டு - மூன்று முறை (முடிந்த அளவு ) செய்தால், தோஷ நிவர்த்தி ஏற்பட்டு தடை விலகும். இதனை அனுபவப் பூர்வமாக உணரலாம்.

பரிகாரம் என்னென்ன?

குல தெய்வ கோயிலில் அல்லது ஏதேனும் ஒரு அம்மன் கோயிலில், சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் திங்கள்கிழமைகளில் அல்லது ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரம் வரும் சனிக்கிழமைகளில் குறைந்தது 8 பேருக்கு தயிர்ச் சாதம் தானமாகத் தருதல் அவசியம். இதனை தாம் சாப்பிடுவதோ  அல்லது வீட்டுக்கோ கொண்டு வரக்கூடாது. இந்த பரிகாரத்தை இரண்டு மூன்று முறைக்குக்  குறையாமல் செய்துவந்தால், புனர்ப்பு தோஷம் நீங்கி திருமணத் தடை நீங்கும். திருமணம் கைகூடும் என்பது நிச்சயம். 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com