ஸ்ரீபெரும்புதூரில் தண்ணீர் குழாயின் நடுவே கழிவுநீர் கால்வாய்: மக்கள் வேதனை

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் தண்ணீர் குழாயின் நடுவே கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் தண்ணீர் குழாயின் நடுவே கழிவுநீர் கால்வாய்: மக்கள் வேதனை

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் தண்ணீர் குழாயின் நடுவே கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி இரண்டாவது வார்டில் உள்ள தெருக்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்கள் பயன்படுத்தப்படும் தண்ணீர் குழாயை அப்புறப்படுத்தாமல் அதன் நடுவே கழிவுநீர் கால்வாய் கட்டியுள்ளனர். 

செல்லப்பெருமாள் நகர் பிரதான சாலையில் கழிவுநீர் கால்வாய் நடுவே கட்டுவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் இரண்டாவது வார்டு உறுப்பினர் பிரகாஷ் குட்டி, ஒப்பந்ததாரர் என அனைவரிடமும் முறையிட்டுள்ளனர்.

ஆனால் அப்பகுதி மக்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காமல் அப்படியே தண்ணீர் குழாயின் நடுவே கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு தற்போது குடிநீர் குழாயில் வருகின்ற நீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. 

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல இன்னல்களை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையோடு கூறுகின்றனர். 

அரசு கவனம் செலுத்தி மெத்தனப்போக்கில் செயல்படும் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகத்தின் மீதும் ஒப்பந்ததாரர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com