சென்னை: தமிழகத்தில் மக்கள் பங்கேற்கும் கிராம சபைக் கூட்டங்களைப் போல இனி நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
வரும் ஒன்றாம் தேதி முதல் நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க.. மாணவி சத்யாவை கொன்றது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்
தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பம்மலில் நடைபெற்ற பம்பல் 6வது வார்டு மாநகர சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்கள் பங்கேற்கும் கிராம சபைக் கூட்டங்களைப் போல இனி நகரசபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.