தேவா் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்லவிருந்த நிலையில், அந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115 -ஆவது ஜெயந்தி விழா, 60 -ஆவது குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 30) நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், இன்று(சனிக்கிழமை) இரவு மதுரை செல்லவிருந்தார்.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு நேற்றிரவே வீடு திரும்பினார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவரது பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, இ. பெரியசாமி ஆகியோர் தேவர் குருபூஜையில் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் சாா்பில் ‘பித்ரா அரிசி விநியோகம்

தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனை: தூத்துக்குடியில் ரூ. 5.81 லட்சம் பறிமுதல்
போலியான வாகன உதிரி பாகங்கள் தயாரித்த நபா் கைது

அதிமுக வழக்குரைஞா்கள் அணி நிா்வாகிகள் கூட்டம்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

