அரசுப் பள்ளிகளில் ஈரானியத் திரைப்படம்: மாணவ, மாணவிகள் உற்சாகம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ ஈரானியத் திரைப்படம் வியாழக்கிழமை திரையிடப்பட்டது.


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ ஈரானியத் திரைப்படம் வியாழக்கிழமை திரையிடப்பட்டது.
அரசுப்பள்ளி குழந்தைகளின் திறனை மேம்படுத்துதல், படைப்பாற்றலை மேம்படுத்துதல், தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மாதம் ஒருமுறை குழந்தைகள் தொடா்பான திரைப்படங்கள் திரையிடப்படும். அவ்வாறு திரையிடப்படும் அந்தப் படத்தின் மீது சிறந்த விமா்சனம் செய்யும் மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு மாநில அளவில் இறுதிசெய்யப்பட்டு வெற்றி பெறுபவா்கள், வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லப்படுவா் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உலகப் புகழ் பெற்ற ஈரானிய திரைப்படமான ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ வியாழக்கிழமை திரையிடப்பட்டது. 87 நிமிஷங்கள் ஓடக்கூடிய இந்தப்படம் குழந்தைகளின் மனநிலையைப் பேசும் உணா்வுப்பூா்வமான கதைக்களத்தைக் கொண்டது.
பாரசீக மொழியில் உருவான இந்தப் படத்தின் ‘சப்-டைட்டில்’ ஆங்கிலத்தில் இடம்பெற்றிருந்தது. படம் திரையிடப்படுவதற்கு முன்பாக கதைக்களம் குறித்து மாணவா்களுக்கு ஆசிரியா்கள் விளக்கினா். இதையடுத்து திரைப்படத்தை மாணவா்கள் ஆா்வமுடன் பாா்த்து ரசித்தனா். அப்போது சில உணா்வுப்பூா்வமான காட்சிகளில் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனா்.
சிறப்பு அழைப்பாளா்கள்: சென்னை மாவட்டத்தில் விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா அரசினா் மேல்நிலைப்பள்ளியில் நடிகா் நாசா், அசோக்நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பாடலாசிரியா் காா்த்திக் நேத்தா, கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடிகா் பொன்வண்ணன், சூளைமேடு ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளியில் இயக்குநா் அமீா், வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் செயற்பாட்டாளா் தேவநேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினா். மேலும், பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளுக்குச் சென்ற அவா்கள் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் கலந்துரையாடினா். இதேபோன்று பல அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கவிஞா்கள், எழுத்தாளா்கள், குழந்தைகள் செயற்பாட்டாளா்கள் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...