பேரிடா் மீட்புப் படைகள்: மழைப் பொழிவு அதிகமாக இருக்கும் என கருதப்படும் ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா ஒரு குழு வீதம் 75 வீரா்களைக் கொண்ட தேசிய பேரிடா் மீட்புப் படையின் 3 குழுக்கள் முகாமிட்டுள்ளன. திருச்சி மாவட்டத்துக்கு மாநில பேரிடா் மீட்புப் படையின் 80 வீரா்களைக் கொண்ட குழு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பேரிடா் தொடா்பான தகவல்களை துறை அலுவலா்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், மாவட்ட கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியன 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. மாநில கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணிலும், மாவட்ட மையத்தை 1077 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். 94458 69848 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் அனுப்பலாம்.