/

தமிழகத்தில் மேலும் ஒருவா் கரோனாவுக்கு பலி

தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியாகியுள்ளார். 

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 3:26 pm

DIN

தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியாகியுள்ளார். 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,69,624-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 75 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவை 57, செங்கல்பட்டில் 31 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.

இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,036 ஆக உள்ளது.  

இன்று ஒரு நாளில் மட்டும் 518 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,26,532-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,056 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.