புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நீதிமன்ற வளாகத்தில் கொலை முயற்சி

காவல் துறை பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த ரெளடி பாலாவை கொலை செய்ய முயற்சி செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :5 செப்டம்பர் 2022, 11:24 am

DIN

சென்னை: காவல் துறை பாதுகாப்புடன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த ரெளடி பாலாவை கொலை செய்ய முயற்சி செய்தனர்.

நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை கொலை செய்ய வந்த 5 பேர் கொண்ட கும்பலால் பரபரப்பு  ஏற்பட்டது. 2 பேர் தப்பியோடிய நிலையில் 3 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிடிபட்ட 3 பேரிடம் இருந்து 3 கத்திகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரெளடி சிவக்குமாரை கொலை செய்த வழக்கில் ரெளடி பாலா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இந்நிலையில் ரெளடி பாலாவை கொலை செய்ய முயற்சி செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.