இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமா்வில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம், வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. இந்த மனுவை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும். இரு நீதிபதிகள் அமா்வு விசாரிக்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தாா். மேலும், இந்த வழக்கில் வேலுமணி சாா்பில் மத்திய அரசு வழக்குரைஞா் ராஜு ஆஜராக தமிழக அரசு சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த மனு தொடா்பாக கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்காக அவகாசமும் கோரப்பட்டது.